
பூக்குழி நாவலிலிருந்து சில குறிப்புகள் - அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்
குறிப்பு: தமிழ் படிப்பதை பத்தாம் வகுப்பில் விட்டு ஒன்பது ஆண்டுகளில் விரிவாக எழுதுவது இதுவே. என்னுடிய முதல் தமிழ் நாவலும் ஆகும். பிழைகளோ அல்லது சாதாரணமாக எழுதப்படும் உரைகளில் இருந்து கேலி செய்யும் அளவுக்கு வேறுபட்டால் மன்னிக்கவும். கடலை இதுவரைக்கும் பார்க்காத ஒருவர் புதிதாக நெய்தலின் வாசனையையும் வியர்வையை முதல் முறை உணர்வது போல் எனக்குத் தோன்றுகிறது. சரோஜா எப்படி குமரேசனின் ஊருக்கு வரும் வழியில் எல்லாவற்றயும் புதிதாக அனுபவித்ததாளோ அப்படியே எனக்கும் தோன்றுகிறது சில வரிகளில். இருவரும் காதலிக்கின்றன திருமணம் செய்துகொண்டு ஒருவர் ஊருக்கு ஓடி செல்கின்றன…எத்தனை கேள்விகள்? எத்தனை அவமானங்கள்? அவர் ஊர் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? எப்படி எதிர்கொள்கிறார்கள்? அதே தொடக்கமாகும். ...


