குறிப்பு: தமிழ் படிப்பதை பத்தாம் வகுப்பில் விட்டு ஒன்பது ஆண்டுகளில் விரிவாக எழுதுவது இதுவே. என்னுடிய முதல் தமிழ் நாவலும் ஆகும். பிழைகளோ அல்லது சாதாரணமாக எழுதப்படும் உரைகளில் இருந்து கேலி செய்யும் அளவுக்கு வேறுபட்டால் மன்னிக்கவும்.


கடலை இதுவரைக்கும் பார்க்காத ஒருவர் புதிதாக நெய்தலின் வாசனையையும் வியர்வையை முதல் முறை உணர்வது போல் எனக்குத் தோன்றுகிறது. சரோஜா எப்படி குமரேசனின் ஊருக்கு வரும் வழியில் எல்லாவற்றயும் புதிதாக அனுபவித்ததாளோ அப்படியே எனக்கும் தோன்றுகிறது சில வரிகளில். இருவரும் காதலிக்கின்றன திருமணம் செய்துகொண்டு ஒருவர் ஊருக்கு ஓடி செல்கின்றன…எத்தனை கேள்விகள்? எத்தனை அவமானங்கள்? அவர் ஊர் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? எப்படி எதிர்கொள்கிறார்கள்? அதே தொடக்கமாகும்.

எந்தக் காலத்தில் நடக்கிறது இந்தக் கதை என்று அறிவது கடினமே. பேருந்துகள் இருக்கின்றன கைபேசிக்கு முன்பு என்பது மட்டுமே புரிகிறது. ஓர் உண்மை நிகழ்விலிருந்து வருவதா இது? காதலுக்கு பதிலாக வன்மத்தையே காட்டும் எத்தனை பல்லாயிரம் கதைகள் வரலாற்று முழுக்க நடந்திருக்கும்? எத்தனை மனமுடைந்த மனிதர்கள்: குமரேசன் மற்றும் சரோஜாவின் போலான கதைகளிலிருந்து வருகிறது என்று நினைத்து இலகினேன்.

மின்வெளிச்சத்துக்கு பழகிய சரோஜாவின் பாறை இருளில் பயமும் அவள் மற்ற நகரங்களில் பழகும் மக்களைக் குமரேசனின் ஊர் மக்களைவுடன் ஒப்பீடுவதும் என்னை ஈர்க்கின்றன. வெவ்வேறு காரணங்களுக்காக ஈர்க்கின்றன. முதலில் குமரேசனின் கொட்டகை பாறைமேல் இருப்பதாகவும் பாறை அருகில் காடுகள் தவிர்த்து வேறு கொட்டகைகள் இல்லை என்று அப்பராயின் வெம்மையிலியும் தனிமையிலும் வர்ணிக்கிறாரு பெருமாள் முருகன் அவர்கள். இப்படி ஓர் காட்சியை நான் கண்டதில்லை. எவளோ பெரிய பாறை இது? கிணற்றுக்கு எப்படி ஏற்றம் கட்டினார்கள்? கர்நாடகத்த்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கிணறுகளில் ஏற்றம் கட்டுவதற்கு இருக்கும் மேடுகளையும் கயிற்றை இழுக்கும் சக்கரத்தையும் கண்டுள்ளேன்.

இரண்டாவதாக நானும் நவீன் பாகல்கோட் அவர்களும் அரசிய மற்றும் அரசாங்க தொழில்நுட்பங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தோம். லிவிங் லேப்ஸ் இன்ஸ்டிடியூட் (Living Labs Institute) Techno Biographies, அதாவது தொழில்நுட்ப சரிதைகள் என்று ஒரு பாட தொகுப்பை வழங்குகிறது.

யாரின் கருத்து கட்டளை ஆகக்கூடும்?

சரோஜா அவர் காதலன் மற்றும் சீராயி, குமரேசனின் தாயார் அவர்களுக்கு அவ்வூர் கூடி ஒரு கட்டளை விதிக்கிறது.

‘இங்க பாரு மாப்ள. ஊரு நோம்பியாவே நிறுத்தலாம்னு சொன்னாங்க. வேற எனத்துப் பிள்ள ஊர்ல இருக்கிற தீட்டக் கழிக்காத நோம்பி போடக்கூடாதுன்னு […]’

‘[…] இங்க பாரு மாப்ள… பிள்ள என்ன எனமுன்னு தெளிவாத் தெரியற வரைக்கும் உன்குடும்பத்த ஊர விட்டு ஒதுக்கி வெச்சிருக்கிறம். கோயில் வரி வாங்க மாட்டம். நோம்பி அது இதுன்னு கோயப்பக்கம் வந்திரக்கூடாது. […] ஊருக்குள்ள ஆரு வீட்டிலயும் எதும் உங்களுக்கு தரமாட்டாங்க. உங்க கிட்டயும் வாங்க மாட்டாங்க. கட்டுப்பாட்ட மீறுனா ஊர்க்குத்தம் பாத்துக்க. […]’

இந்தக் கிராமத்திற்கு வர வேண்டுமெனில் பேருந்து நிறுத்தும் இடத்த்திலிருந்து வெகுதூரம் நடக்க வேண்டும். இந்த ஊர் கட்டுப்பாட்டைக் கேள்வி கேற்க யாருக்கு தைரியமும் சக்தியும் உள்ளது? இந்த ஊர் மக்களுள் பெரும்பான்மை உள்ள கருத்தே எல்லாருக்கமான சட்டம் ஆகும். ஒரு கோணத்திலும் இந்த ஊருக்குள் தேசிய மாநில மற்றும் மாவட்ட அரசாட்சியின் சட்டமும் ஒழுங்கு படுத்த்தும் சக்திகளும் வரவில்லை இந்தக் கதைக்குள்…

எதற்காக நம் அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் ஊர் மக்கள் அதாவது இந்த கிராமத்த்துக்குள் பெரும்பான்மை உள்ள மக்களின் சக்திகளை அடிப்படையாக வைத்து அரசியல் அமைப்பை உருவாக்கவில்லை? Adult franchise, ஒவ்வொரு நபருக்கும் இருக்க கூடிய வாக்குரிமையை வைத்தே உருவாக்கியுள்ளார்கள். இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தின் 73 ஆம் திருத்தத்தில் பஞ்சாயத் அரசாங்கங்களை உருவாக்கச் சட்டம் எழுதப் பட்டது. அது 1992 வில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு ஊர்களுக்கேன் சுய ஆட்சி சக்திகள் இல்லை? அதற்க்கு முன்பும் சுதந்திரத்த்திற்கு முன்பும் ஏன் ஏதும் இல்லையா என்று கேட்டால் அவ்வாரிய அரசு அமைப்பு மக்களின் கட்டுப்பாட்டிற்கே இருந்திருக்கலாம். இப்பொழுதும் கட்டுபாட்டிற்கே இருப்பதாய் உணரலாம் அனால் அது வேற வகையில் நடக்கின்றன. 1

இதை நான் ஆங்கிலத்தில் constitutional observer என்ற இணையதளத்த்தில் கேட்டேன். அரசியல் அமைப்புச் சட்டத்தை 1948 யில் எழுதிய constituent assembly யின் வாக்குவாதங்களில் இருந்தும் நாடாளுமன்றத்த்தின் மக்களின் சபையில் 1984 யில் இருந்து 2015 வரைக்கும் நடந்த வாக்குவாதங்களில் இருந்தும் சொற்பொழிவுப் பகுதிகளை எடுத்துக் கொடுக்கும் கேள்விக்குப் பதிலாக… அங்கு “Why must the village not be the unit of governance” என்ற கேள்விக்கு இது ஒரு பதிலாக வந்தது.

[…] I wish to submit to this House for their very serious consideration that when the constituencies come to be formed under the new Constitution, they should make territorial constituencies; they should not make constituencies of cities alone and they should not make constituencies of villages alone. They should evolve a system by which the differentiation between the rural and urban people, between those who have too much and who have too little may for all time be removed, so that we may evolve one nation. […] The disparity between the mode of living of the rural people and the urban people must be abolished if we want to evolve one nation. At the present time, what do we find? The urban people and the rural people are so much a part from each other in their modes of living and outlook on life. To go near the villages is very difficult. The urban people do not like to go to the villages. I know the Congress has gone to the villages all honour to the Congress. But, there are a good many in the Congress also who do not wish to go to the villages; they cannot go because their mode of living is different. You will have to evolve such constituencies in which the cities and villages come in without any distinction; if there is a constituency for a lakhs of the population, the cities and villages should be included in one constituency. […]

கிராமங்கிலிலிருந்து என மற்றும் வேற வகைகளுள் உள்ள ஒடுக்குமுறைகள் வருகின்றன என்று புரிந்து அதையே வலுமைப்படுத்தக கூடாது என்றே அம்பேத்கர் அவர்கள் விவாதித்துள்ளார். அவர் சொற்களில்:

“What is the village but a sink of localism, a den of ignorance, narrow mindedness and communalism. I am glad that the Draft Constitution has discarded the village and adopted the individual as its unit.” 2 3

‘love’ என்று தேடுகிறேன் ‘Where does Hate Live?’ என்ற தலத்தில்.

குறிப்பு: எழுத்து மற்றும் இலக்கணப்பிழைகளை திருத்திய என் தாய், கோமதி அவர்களுக்கு நன்றி. அது மற்றுமின்றி வாழ்க்கை முழுவுதம் ஆங்கிலத்தில் விரும்பி எழுதிப் பழகிய எனக்கு, தமிழ் எழுத்துவாக்கில் வரும் உவமைகளும் பழக்கங்களும் வருவதில்லை… ஆங்கிலத்தில் எப்படி எழுதுவேனோ அப்படியே எழுதியிருந்தேன். அதை பார்த்து சிரித்து திருத்தியதக்கும் நன்றி.


  1. Idiculla, M. (2020). Unpacking Local Self-Government: The Uncertain Power of Cities in the Indian Constitution. Verfassung in Recht Und Übersee, 53(1), 30–50. https://doi.org/10.5771/0506-7286-2020-1-30↩︎

  2. Jodhka, S. S. (2002). Nation and Village Images of Rural India in Gandhi, Nehru and Ambedkar. Economic and Political Weekly, 37(32), 3343–3353. https://www.epw.in/journal/2002/32/special-articles/nation-and-village.html?check_logged_in=1↩︎

  3. Idiculla, M. (2020). Unpacking Local Self-Government: The Uncertain Power of Cities in the Indian Constitution. Verfassung in Recht Und Übersee, 53(1), 30–50. https://doi.org/10.5771/0506-7286-2020-1-30↩︎

  4. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/18-year-old-dalit-boy-tied-up-beaten-up/articleshowprint/88797034.cms↩︎

  5. https://indianexpress.com/article/india/police-mediated-return-home-young-woman-tamil-nadu-killed-family-marrying-dalit-man-9103780/↩︎

  6. https://timesofindia.indiatimes.com/city/chennai/dalit-man-killed-in-trichy-as-two-groups-clash-over-love-affair/articleshow/111592350.cms↩︎